கேன் வில்லியம்சன் -சாரா ரஹீம் தம்பதிக்கு பெண் குழந்தை

Sinoj
புதன், 28 பிப்ரவரி 2024 (16:05 IST)
கேன் வில்லியம்சன் -சாரா ரஹீம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான  கேன் வில்லியம்சன் 3 வது முறையாக தந்தையாகியுள்ளார்.
 
சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவரது மனைவி - சாரா ரஹீம். இத்தம்பதிக்கு  கடந்த 2019 ல் முதல் பெண் குழந்தை( மேகி) பிறந்தது. அடுத்து, 2022 ஆம் ஆண்டு  2 வது மகன் பிறந்தார். இந்த நிலையில், இத்தம்பதிக்கு அடுத்து, 3 வது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
வில்லியம்சன் தனது மனைவி சாரா ரஹீம் மற்றும் புதிதாக குழந்தை மகளுடன் இருக்கும் புகைப்படத்தை  தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
இதில், இந்த உலகின் அழகான பெண்ணை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்