உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

vinoth

சனி, 25 மே 2024 (09:49 IST)
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு உலகக் கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன. இது சம்மந்தமாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான் ரசிகர்களை அதிருப்தியடையச் செய்தது.

அதே போல அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அதுவும் தேவையில்லாதது என சொல்லப்பட்டது. இப்படி அந்த அணி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் விரைவில் உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என பல வீரர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் தன்னுடைய ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார். அதில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

யுவ்ராஜ் அறிவித்த ப்ளேயிங் லெவன்
ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜாஸ்பிரீத் பும்ரா, யுஷ்வேந்திர சஹால், முகமது சிராஜ்,  அர்ஷ்தீப் சிங்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்