இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது ஓய்வுக்கு பிறகு, வெளிநாடுகளில் பல டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வாரிய அனுமதியுடன் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கவுள்ள அபுதாபி டி 10 லீக் போட்டிகளில் யுவராஜ் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.