ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில், கடைசி ஓவரில் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி போராடி, வெறும் ஆறு ரன்களில் கோப்பையை நழுவ விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 190 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து, 191 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
நேற்றைய போட்டியின் கடைசி ஓவரின் போது, பெங்களூர் கிட்டத்தட்ட ஜெயித்து விடும் என்ற நிலை இருந்தபோது, மைதானத்திலேயே விராட் கோலி ஆனந்தக் கண்ணீருடன் இருந்தார் என்பதும், அவர் கையில் கோப்பை கிடைத்தவுடன் துள்ளிக் குதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.