உலகக்கோப்பை டி20 தகுதி சுற்று: நெதர்லாந்து அணிக்கு நமீபியா கொடுத்த எளிய இலக்கு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (11:31 IST)
உலகக்கோப்பை டி20 தகுதி சுற்று: நெதர்லாந்து அணிக்கு நமீபியா கொடுத்த எளிய இலக்கு!
உலக கோப்பை டி20 போட்டியில் தகுதிச்சுற்று தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன 
 
சமீபத்தில் இலங்கை அணியை அபாரமாக வெற்றி கொண்ட நமீபியா அணி இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
தற்போது 122 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணி சற்றுமுன் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 99 பந்துகளில் 99 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்