உலகக்கோப்பை2023: விராட் கோலி அதிரடி சதம்.....இந்திய அணி அபார வெற்றி

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (21:30 IST)
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடந்து வரும் இத்தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  இன்று எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், டாஸ் 66 ரன்னும், ஹசன் 51 ரன்னும், மஹ்முதுல்லா 46 ரன்னும் அடித்தனர். எனவே 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழ்ப்பிற்கு 256 ரன்கள் அடித்தது.

இந்திய அணி தரப்பில்,பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். யாதவ், தாகூர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தரப்பில், ரோஹித் சர்மா 48 ரன்னும், கில் 53 ரன்னும், கோலி 103ரன்னும், கே.எல்.ராகுல் 43 ரன்னும்  அடித்தனர். எனவே இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்