மகளிர் கால்பந்து உலகக்கோப்பை.. ஸ்பெயின் சாம்பியன்.. இங்கிலாந்தை வீழ்த்தியது..!

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:19 IST)
உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்தை1-0  என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் மகளிர் அணி வெற்றி பெற்று
 
ஆரம்ப முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், போட்டியின் 29-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் கார்மோனா முதல் கோலை அடித்தார். அதன் பின் இரு அணிகளின் வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 
 
உலககோப்பை வரலாற்றில் ஸ்பெயின் அணி முதல் முறையாக ஸ்பெயின் மகளிர் அணி முதல் முதலாக கால்பந்து உலக கோப்பையை வென்றதை அடுத்து அந்நாட்டில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்