இந்தியாவில் இருந்து விலகி நிரந்தரமாக லண்டனில் செட்டில் ஆகவுள்ளாரா கோலி?

vinoth

செவ்வாய், 9 ஜூலை 2024 (14:55 IST)
தற்போது 35 வயதாகும் கோலி தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சகட்ட பார்மில் உள்ளார். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர்தான் அதிக ரன்கள் சேர்த்த வீரராக இருக்கிறார். இந்நிலையில் அவரின் ஓய்வு பற்றி அடிக்கடி பேச்சு எழுகிறது. நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்றதும் டி 20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்தார்.

தொடர்ந்து ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு நிரந்தரமாக இங்கிலாந்தின் லண்டனுக்குக் குடியேற உள்ளதாக சொல்லப்படுகிறது. சாதாரண மனிதர்கள் போல புகழ் வெளிச்சம் இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி முன்பே ஒரு முறை பேசும்போது கோலி சூசகமாக தெரிவித்திருந்தார். அதில் “ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர் பயணத்தில் கண்டிப்பாக முடிவு இருக்கும். என்னால் கடைசி வரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது. நான் எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய முழு ஆற்றலையும் நான் காட்ட விரும்புகிறேன். நான் ஓய்வை அறிவித்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு என்னை நீங்கள் காண முடியாது” எனக் கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்