வினோத் காம்ப்ளி சச்சினை விட திறமை மிகுந்தவர் - போட்டுடைக்கும் கபில்தேவ்

Webdunia
திங்கள், 9 மே 2016 (14:52 IST)
வினோத் காம்ப்ளி மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை விட திறமை மிகுந்தவர் என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பெற்றுத் தந்தவருமான கபில்தேவ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள கபில்தேவ், “சச்சின், காம்ப்ளி இருவருமே ஒரே நேரத்தில் சமமான திறமையுடன் கிரிக்கெட்டில் நுழைந்தனர். காம்ப்ளியிடம் நிறைய திறமைகள் இருந்திருக்கலாம்.
 
ஆனால், வினோத் காம்ப்ளிக்கு கிடைத்த ஆதரவு அமைப்புகள், வீட்டுச் சூழ்நிலைகள், மேலும் அவருடைய நண்பர்கள் வட்டம் ஆகியவை என்பது சச்சின் பெற்றிருந்ததுடன் ஒப்பிடும்போது முழுக்க வித்தியாசமானது.
 
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். சச்சின் 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடினார். ஆனால், காம்ப்ளி தனது ஆரம்ப காலத்தில் பெற்ற வெற்றிகளை தக்கவைக்க தவறியதால் சீக்கிரமே காணாமல் போய் விட்டார்.
 
திறமை ஒருபுறம் இருந்தாலும், ஒரு விளையாட்டு வீரருக்கு இதை விட இன்னும் அதிகமான விஷயங்கள் தேவையாக இருக்கிறது. நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பள்ளிகள், கல்லூரிகள்.... எல்லாவற்றிலும் இருந்து ஆதரவு தேவை” என்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்