இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக மார்ச் 12 ஆம் தேதி டி 20 போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.இதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியவர்கள் இடம்பெற்றிருந்தனர்.