ஏற்கனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து சொந்த காரணங்களுக்காக அவர் விலகிக்கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஐபிஎல் மற்றும் ஆஸி தொடரால் பூம்ராவுக்கு மேலும் வேலைப்பளு கொடுக்கவேண்டாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பூம்ராவின் விலகலுக்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
பூம்ராவுக்கு ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் இப்போது அவர் விருப்ப விடுப்பு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் முன்னர் பூம்ராவின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு இனிய விடுமுறை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் பூம்ரா –அனுபமா காதல் துளிர்விட்டுள்ளதாகப் பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அனுபமாவின் தாயார் மறுத்திருந்தார்.