மெச்சூரிட்டி வேண்டாமா...? கைகலப்பில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (14:58 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியில் வீரர்களுக்கு மத்தியில் மோதல் போக்கு உருவானது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததை அடுத்து வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 178 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய வங்கதேச அணி 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனையடுத்து வங்கதேச 170 ரன்கள் இலக்காக மாற்றப்பட்டது.
 
அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 42.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேச அணி. வெற்றி பெற்றதும் வங்கதேச அணி வீரர்கள் மைதானத்தில் ஆக்ரோஷமாக தாறுமாறாக ஓடினர். 
 
அப்போது இந்திய அணியினர் பெவிலியனுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் இந்திய - வங்கதேச வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படகூடிய சூழல் நேர்ந்த நிலையில் இந்திய அணியின் கோச் இந்திய வீரர்களை பெவிலியன் திரும்புமாறு கூறினார். இதனால் மோதல் பெரிதாகாமல் தவிர்க்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்