அதிரடி பேட்ஸ்மேனுக்கு மூன்று ஆண்டுகள் தடை! ஏன் தெரியுமா?

புதன், 29 ஏப்ரல் 2020 (08:50 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான உமர் அக்மல் அவர் மீதான் கிரிக்கெட் சூதாட்டத்துக்காக 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியை சேர்ந்த 29 வயதான உமர் அக்மல் தனது பேட்டிங் திறமைகளுக்காக பேசப்படுவது போலவே சர்ச்சைகளுக்காகவும் பேசப்படுவர். கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் இல்லாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் அவர் ஏற்கனவே பயிற்சியாளரிடம் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘இந்தியாவுக்கு எதிரான இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதற்கு அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் பணம் கொடுக்க ஒரு தரப்பு முயன்றனர்’ எனக் கூறியிருந்தார். ஆனால் இந்த தகவலை ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அவர் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது சர்வதேசக் கிரிக்கெட் விதிகளின் படி தவறானது.


இதையடுத்து இப்போது அவருக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் தரக்கோரி மார்ச் 31ம் தேதி வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் எந்த விளக்கமும் அளிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்