இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் சாப்மேன் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எமிரேட்ஸ் அணியின் ஆயான் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதன் பின்னர் ஆடிய எமிரேட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியில் இறங்கினர். அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் முகமது வாசீம் 29 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 16 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 143 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. கத்துக்குட்டி அணியான எமிரேட்ஸ் நியுசிலாந்தை வென்றிருப்பது கிரிக்கெட் உலகில் கவனத்தைக் குவித்துள்ளது.