ஜெய்ஷாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. செல்வாரா ஜெய்ஷா?

சனி, 19 ஆகஸ்ட் 2023 (12:11 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற இருப்பதை அடுத்து முதல் போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானுக்கு வாருங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  பிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற மைதானத்தில் வரும் 30ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன. 
 
இந்த போட்டியை நேரில் காண பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் ஜெய்ஷா உள்ள நிலையில் இந்த போட்டியை காண நேரில் செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்