சிஎஸ்கேவுக்கு மற்றுமொரு இழப்பு: சொந்த ஊர் கிளம்பினார் ப்ராவோ!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (14:43 IST)
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அணியின் முண்ணனி பந்துவீச்சாளர் ப்ராவோ விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரையிலான ஆட்டங்களில் சிஎஸ்கே அணி அதிக தோல்விகளை சந்தித்து தர வரிசையில் இறுதி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ட்வெய்ன் ப்ராவோ அணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக விளையாடியபோது ப்ராவோவிற்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமாகாத காரணத்தால் ப்ராவோ தனது சொந்த நாடான வெஸ்ட் இண்டீஸுக்கு திரும்புகிறார். இதனால் இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் ப்ராவோ இருக்க மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே போதிய அளவு பலம் வாய்ந்த வீரர்கள் இல்லாத சூழலில் ப்ராவோவின் இழப்பு சிஎஸ்கேவை பலவீனப்படுத்தும் என்று ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்