செல்போன் எண் கேட்ட ரசிகருக்கு போலீஸ் எண் கொடுத்த நடிகை

வியாழன், 15 ஏப்ரல் 2021 (22:09 IST)
செல்போன் எண் கேட்டவருக்கு முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் போலீஸ் எண்ணைக் கொடுத்துள்ளார்.

ஏழாம் அறிவு, புலி, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லாபம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவர் இன்று தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் உங்கள் மொபைல் எண்ணைக் கூறுங்கள் என்று கேட்டார்.

அதற்கு நடிகை ஸ்ருதிஹாசன், 100 என்று போலீஸை தொடர்பு கொள்ளூம் எண்ணைக் கொடுத்துப் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் மற்றோரு ரசிகர் அவரிடம் நீங்கள் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் எனக் கேட்டனர், இதற்கு அமேசிங் எனக் குறிப்பிட்டுள்ளார், இதனால் விஜய்  ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இவர் விஜய்யுடன் புலி என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்