டி-20 உலகக் கோப்பை தொடர்....பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

திங்கள், 28 ஜூன் 2021 (18:37 IST)
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில்  கொரொனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்த நிலையில் தொடர் ரத்து செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பரில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை  கிரிக்கெட்  தொடர் ஐக்கிய அமீரகத்தி நடைபெறும் என  பிசிசிஐ  தலைவர் ஜெய் ச்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்