இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
எனவே, வெறும் 16 ஓவர்களில், இங்கிலாந்து அணி 170 ரன்கள் அடித்து சூப்பர் வெற்றி பெற்றது. இதில், அலெக்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும், ஜோஸ் 49 பந்துகளில் 80 ரன்களும் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.