ஐபிஎல் 2024 சீசனின் 31 ஆவது போட்டி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை திணறவைத்தார். அவர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்க்ளை விளாசினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் சேர்த்தது.
ஆனாலும் இந்த போட்டியில் ஜோஸ் பட்லரின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸால் போட்டியை கடைசி பந்தில் இழந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் 2013 ஆம் ஆண்டு ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.