இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை திணறவைத்தார். அவர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்க்ளை விளாசினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியில் இரு அணி பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். அதில் கவலைகொள்ளத்தக்க விஷயம் என்னவென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலர் அஸ்வின் கடந்த ஐந்து போட்டிகளாக ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இந்த சீசனில் 6 போட்டிகள் விளையாடியுள்ள அவர் ஒரே ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார். அவர் 200 பந்துகளுக்கு மேல் வீசியுள்ள நிலையில் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். அவரின் மோசமான ஐபிஎல் சீசனாக இந்த சீசன் அமைந்துள்ளது.