டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா!

vinoth

வியாழன், 8 மே 2025 (06:38 IST)
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்தது. அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார்.

இதையடுத்து அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கான அணிக்கு அவர் கேப்டனாக இருக்கமாட்டார் என்றும் ஒரு வீரராக மட்டுமே இருப்பார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் திடீரென நேற்றிரவு ரோஹித் ஷர்மா தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 4,301 ரன்கள் சேர்த்துள்ளார். 12 சதங்களும் 18 அரைசதங்களும் சேர்த்துள்ளார். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் அந்தளவுக்கு தன் திறமையை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்