கோலி இன்னிங்ஸ் சரியில்லை… விமர்சனம் வைத்த முன்னாள் கிரிக்கெட்டர்!

vinoth

வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (11:02 IST)
நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியை பெங்களூர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலியின் இன்னிங்ஸ் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்த போட்டியில் கோலி 43 பந்துகளில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் 51 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியில் பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்த கோலி 18 பந்துகளில் 32 ரன்காஇக் குவித்தார் பவர்ப்ளேக்குப் பிறகு ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் பந்துகளை வீணடித்து 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே குவித்தார். அரைசதம் அடித்த பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட அவர் அவுட் ஆனார். ஆனால் அவர் ஆமைவேகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்முனையில் ரஜத் படிதார் ஒரே ஓவரில் 27 ரன்கள் சேர்த்து வானவேடிக்கைக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோலியின் இந்த ஆமைவேக இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “கோலியிடம் இருந்து சிங்கிள்கள் மட்டுமே கிடைத்தன. அவர் சில அடிக்க தோதான பந்துகளை மட்டுமே அடித்துக் கொள்ளலாம் என விளையாடினார். ஆனால் எதிர்முனையில் படிதார் அதிரடியாக விளையாடி கிடைக்கும் பந்துகளில் எல்லாம் பவுண்டரிகளை விளாசினார். இன்னும் தினேஷ் கார்த்திக் மற்றும் மஹிபால் ரோம்ரார் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கும் போது கோலி சிரத்தை எடுத்து சில ரிஸ்க்கான ஷாட்களை ஆடியிருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்