இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் ஆஸி அணி நிர்னயித்த 265 என்ற இலக்கைத் துரத்திய போது மிகவும் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார் ஆட்டநாயகன் கோலி. அவருக்குத் துணையாக கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் ஆட்டமும் அமைந்தது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்தினார். அந்த அணியில் முக்கிய வீரர்கள் பலர் இடம்பெறாத நிலையிலும் ஆஸி, அணியை அரையிறுதி வரை வெற்றிகரமாக வழிநடத்தி வலுவான இந்தியாவிடம் தோற்றுதான் வெளியேறியது ஆஸி அணி.