ஐபிஎல் திருவிழாவில் இன்று டெல்லி vs ஐதராபாத்.. டாஸ் அப்டேட்!

vinoth

சனி, 20 ஏப்ரல் 2024 (19:00 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும்7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இனிமேல் வரும் போட்டிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்பதால் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் 35 ஆவது போட்டியில் வலிமையான ஐதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 6 போட்டிகளில் விளைடாடியுள்ள சன் ரைசர்ஸ் அணி 4 ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏழு போட்டிகளில் 3 ல் மற்றும் வெற்றி பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற அணி முடிவை எடுத்துள்ளது.

டெல்லி அணி விவரம்
டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ரிஷப் பண்ட்(w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்

ஐதராபாத் அணி விவரம்
அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் தலைவர், ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென்(w), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(c), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்