ரபாடாவின் தடை நீக்கம் கூறுவது என்ன? ஸ்மித் சாடல்...

வியாழன், 22 மார்ச் 2018 (16:01 IST)
ரபாடாவிற்கும் ஸ்மித்திற்கும் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக ரபாடவிற்கு போட்டில் விளையாட தடை, அபராதம் மற்றும் புள்ளி இழப்பு ஆகியவை விதிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால், மேல் முறையீட்டில் இவை அனைத்தையும் சரிசெய்து விட்டார் ரபாட. இதனால், சற்று அதிருப்தியில் உள்ளார் ஸ்மித். இது குறித்து ஸ்மித் கூறியதாவது, ஆகவே ஐசிசி ஒரு தரநிலையை அமைத்துக் கொடுத்துள்ளது இல்லையா? உண்மையில் வீடியோ பதிவில் தெரிந்ததை விட அவர் என் மீது கொஞ்சம் கடுமையாகவே மோதினார்.
 
பேட்ஸ்மென் முகத்தருகே ஏன் வர வேண்டும்? ஏற்கெனவேதான் போட்டியில் பவுலர் வென்று விட்டாரே. ஆனால் அவர்கள் வேண்டுமென்றே இடிப்பது அல்ல என்பதை ஏற்கெனவே முடிவு செய்து விட்டார்கள். 
 
இனி மோதிவிட்டு அப்பீல் செய்தால் தப்பித்து விடலாம் என்ற தவறான முன்னுதாரணம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் இனி அப்பீல் செய்வார்கள், அதுதானே இதற்கு அர்த்தம்.
 
ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுகிறது, தண்டிக்கப்படுகிறார், ஆனால் அப்பீல் செய்து குற்றச்சாட்டுக் குறைக்கப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம் என ஸ்மித் கேட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்