ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் தேவையா?

திங்கள், 19 மார்ச் 2018 (20:03 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடன் வாங்கி மணிமண்டபன் கட்ட வேண்டுமா என திமுக எம்எல்ஏ ஒருவர் கேட கேள்விக்கு அதிமுக தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலின் போது, இந்த ஆண்டின் பட்ஜெட்டில் ரூ.23 ஆயிரத்து 176 கோடி பற்றாக்குறை என்று நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்தார். இந்த பற்றாக்குறையை போக்க ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், கடன் சுமை இருக்கும்போது ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமா என திமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இவரது கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார். 
 
அமைச்சர் தங்கமணி கூறியதாவது, திமுக ஆட்சிக் காலத்தில் கடன்பெற்று ஏன் செம்மொழி மாநாடு நடத்தினீர்கள்? என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும், தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதை விமர்சித்து பேசுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். மணிமண்டபத்தை தவிர்த்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்