ஃபிட் என சான்றிதழ் அளித்த NCA… ஆனாலும் முதுகுவலி என ரஞ்சி கோப்பையில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ்!

vinoth

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:51 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார்.

அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி இப்போது அவர் ரஞ்சி கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

இளம் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க விரும்புகிறார்கள். அதற்காக இதுபோன்ற உடல்நலப் பிரச்சனைகளை காரணம் காட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு சமீபகாலமாக எழுந்து வருகிறது. ஸ்ரேயாஸ் போலவே இஷான் கிஷானும் இதுபோல ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்