ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் அடுத்த ஆண்டே கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து இப்போது அவர் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு அடுத்து கேப்டனாகும் வீரர்களின் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.