உலகக் கோப்பையில நாங்க அபாயகரமான அணிதான்… பங்களாதேஷ் கேப்டன் மிரட்டல்!

சனி, 16 செப்டம்பர் 2023 (12:10 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சூப்பர் 4 கடைசி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து, இந்தியாவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதன் பின்னர் விளையாடிய இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 259 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டி முடிந்ததும் பேசிய பங்களாதேஷ் அணி ஷகீப் அல் ஹசன் “நாங்கள் எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் இடம் கிடைக்கவேண்டும் என நினைத்து வாய்ப்பளித்தோம். எங்கள் அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

நாங்கள் ஒரு சிறந்த அணியை பெற்றிருக்கிறோம். எங்கள் அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்கள். நாங்கள் உலகக் கோப்பை தொடரில் ஒரு அபாயகரமான அணியாக இருப்போம் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்