ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:56 IST)
ஆசியக் கோப்பை நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 342 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 151 ரன்களும் இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களும் சேர்த்து மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினர். இதன் பின்னர் இமாலய இலக்கை துரத்தி ஆடிய நேபாளம் அணியை பாகிஸ்தான் பவுலர்கள் தவிடு பொடியாக்கினர்.

23.4 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே சேர்த்த நேபாளம் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஷதாப் கான் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்