இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற சில ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்தினார். ஆனால் அவருக்குப் பதிலாக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.
இன்னும் சில மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் தன்னுடைய உலகக்கோப்பை போட்டி நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற சேவாக். அதில் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு சென்ற அணிதான் அந்த தொடரின் சிறந்த அணி என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் “அப்போது அதுதான் உலகின் சிறந்த அணியாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை தோற்று லீக் சுற்றில் இருந்தே வெளியேறினோம். அந்த தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இரண்டு நாட்கள் ஹோட்டல் அறையிலேயே நான் அடைந்து கிடந்தேன்.” என சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் சேவாக்.