கிரிக்கெட்டில் களம் இறங்கிய ராகுல் ட்ராவிட் மகன்! – முதல் போட்டியே இதுவா?

ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:03 IST)
பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டின் மகன் சமித் ட்ராவிட் யு-19 கர்நாடக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



90ஸ் கிட்ஸின் ஆதர்ச கிரிக்கெட் நாயகர்களில் ஒருவர் ராகுல் ட்ராவிட். எந்த பந்தையும் ரீச்சை தாண்ட விடாத அவரது தடுப்பு ஆட்டத்திற்காக The Wall என பெயர் பெற்றவர். தற்போது ராகுல் ட்ராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ராகுல் ட்ராவிட்டின் மூத்த மகன் சமித் ட்ராவிட் தற்போது கிரிக்கெட்டில் களம் இறங்கியுள்ளார். கர்நாடக அண்டர் 19 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சமித் எதிர்வரும் வினோ மன்கட் தொடரில் விளையாட உள்ளார். ஏற்கனவே ட்ராவிட்டின் இளைய மகன் அன்வய் ட்ராவிட் அண்டர் 14 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்