முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, டிம் டேவிட்டின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல் 50 ரன்களும், ரஜத் படிதார் 48 ரன்களும் சேர்த்தனர்.
சர்பராஸ் கான் மட்டும் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஜேமி ஓவர்டன் 37 ரன்கள், பிரசாந்த் வீர் ரன்கள் என எடுத்து போராடிய போதிலும், ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.