சேவாக் எப்படி பட்டவர்: நினைவு கூரும் சச்சின்!

சனி, 9 ஜூன் 2018 (18:17 IST)
எந்தவொரு பந்து வீச்சாளராக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர் சேவாக். சேவாக் - சச்சின் கூட்டனி பற்றி புதிதாக கூறி தெரியும் அளவிற்கு ஏதுமில்லை. 
 
சேவாக் - சச்சின் இருவரும் 10 ஓவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் எதிரணியின் நிலை பரிதாபமே. இந்த ஜோடி இந்தியவின் தலைசிறந்த ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 
 
இந்நிலையில், சேவாக் இந்திய அணியில் இணையும் போது நடந்தது என்ன? என்பதை சச்சின் நினைவு கூர்ந்துள்ளார். சச்சின் கூறியதாவது, சேவாக் அணியில் நுழைந்தபோது அவர் என்னிடம் பேசமாட்டார். இருவரும் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டுமென்றால், சேவாக்கை அதற்கு ஏற்றபடி தயார்படுத்த வேண்டியது அவசியம் என கூறினார். 
 
சச்சின் - சேவாக் ஜோடி இந்திய அணிக்காக 93 ஒருநாள் போட்டியில் இணைந்து விளையாடி 3919 ரன்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்