ரோஹித் ஷர்மா 30 ரன்களில் திருப்தி அடைந்துவிடுகிறார்… கவாஸ்கர் குற்றச்சாட்டு!

vinoth

சனி, 8 மார்ச் 2025 (10:37 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் 9 ஆம் தேதி நடக்கிறது.

இந்த போட்டிதான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கும் என தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா குறித்து கவாஸ்கர் ஒரு முக்கியமானக் கருத்தைப் பேசியுள்ளார். அதில் “ரோஹித் ஷர்மா களத்தில் 25 ஓவர்கள் வரை நிற்கவேண்டும். அப்படி நின்றால் இந்திய அணியால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். அதிரடியாக விளையாடுகிறேன் என்று மைதானத்துக்கு சென்று பேட்டை சுழற்றுவது ஒரு வழி என்றால் 25 ஓவர்கள் வரை களத்தில் நிற்பது இன்னொரு வழிமுறை. அவர் 25, 30 ரன்கள் அடித்தால் போதும் என்று திருப்தி அடைந்துவிடக் கூடாது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்