இந்த தொடர் முழுவதும் இந்திய அணி துபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவது அது சாதகமான அம்சமாக மற்ற நாட்டு அணிகளால் குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி பேசிய பயிற்சியாளர் கம்பீர் “து எப்படி மற்ற அணிகளுக்கு பொதுவான மைதானமோ. அதுபோலதான் எங்களுக்கும். நாங்கள் இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் பயிற்சி கூட செய்ததில்லை. ஐசிசி கிரிக்கெட் அகாடெமியில்தான் பயிற்சி செய்தோம். ஆனால் இதுபற்றி தொடர்ந்து சிலர் தொட்டிலில் ஆடும் குழந்தைகள் போல பேசி வருகின்றனர்” எனக் காட்டமாகப் பதிலளித்திருந்தார்.