நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி கோலி போல ஆக்ரோஷமாக இல்லை என்றும் அவர் வீரர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரோஹித் ஷர்மா பற்றி பேசியுள்ள வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா “ ரோஹித் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்தான். ஆனால் அவரின் எதிர்காலம் இப்படியே இருக்காது. அவருடைய வயது சாதகமாக இல்லை. எனவே தேர்வுக்குழு அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்யவேண்டிய சூழலில் உள்ளது. அதனால் இனிமேல் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு இருக்குமா என்பதே சந்தேகம்தான் எனக் கூறியுள்ளார்.