இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரோடு அந்த பதவியிலிருந்து விலகவுள்ளார். ஏற்கனவே அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும் நீட்டிக்கபட்டுள்ளது. டிராவிட் நினைத்திருந்தால் அவர் பயிற்சியாளராக தொடர மீண்டும் விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் டிராவிட் குறித்து பேசும்போது, “நான் மீண்டும் டிராவிட் பயிற்சியாளராக தொடரவேண்டும் என நினைத்தேன். அதை அவரிடம் சொல்லவும் செய்தேன். ஆனால் அவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார். அவரோடு பணியாற்றிய காலத்தில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.