டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முந்திய ரோஹித் ஷர்மா!

vinoth

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:32 IST)
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதில் இந்திய முதல்  3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து மோசமாக தடுமாறியது. அதன் பின்னர் ஜடேஜாவோடு ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவருமே சதமடித்து அசத்தினர்.

நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் மூன்று சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 57 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 80 சிக்சர்களை விளாசியுள்ளார்.

தோனி 78 சிக்ஸர்களோடு மூன்றாம் இடத்திலும், சேவாக் 90 சிக்ஸர்களோடு முதலிடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக வயதில் சதமடித்த இந்திய கேப்டன் எனும் சாதனையையும் அவர் விஜய் அமர்நாத்திடம் இருந்து பெற்றுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்