கேப்டன் ரோகித் சர்மா அதிரடி சதம்..! இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறல்..!!

Senthil Velan

வியாழன், 15 பிப்ரவரி 2024 (15:17 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
 
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரரான ஜெயஸ்வால் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். மற்றொரு வீரரான ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். 
 
மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடஜாவும் பொறுப்புடன் விளையாடி வருகிறார். கேப்டன் ரோகித் சர்மா 157 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ரவீந்திர ஜடேஜா அரைசதம் எடுத்தார்.

ALSO READ: தேர்தல் வாக்குறுதிகளை 97% நிறைவேற்றியதாக பச்சை பொய்.! எடப்பாடி பழனிச்சாமி..!!

60 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் களை இழந்து 214 ரன்களை குவித்துள்ளது. ரோகித் சர்மாவும், ஜடேஜாவும் விளையாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்