இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ரிஷப் பண்ட், இரண்டாவது நாளில் காயத்தோடு விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் நேற்றைய போட்டில் நன்றாக விளையாடி வந்த ரிஷப் பண்ட், பந்து காலில் பட்டதால் காயமடைந்தார். இதனால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
அதனால் அவர் இரண்டாவது நாள் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ, இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ் போட்டியில் ரிஷப் பண்டிற்கு காயம் ஏற்பட்டதால் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் செயல்படுவார் என்றும், காயம் இருந்தபோதிலும் ரிஷப் பண்ட் 2ம் நாளில் விளையாடுவார் என்றும், ஆனால் அணியின் தேவைகளுக்கு ஏற்ப அவர் பேட்டிங் லைன் அப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K