இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றில் வெற்றி பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. அதே போல டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டும் வென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுமே ப்ளே ஆஃப் செல்ல இனிவரும் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பான ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி அணி விவரம்
பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(w/c), அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது
குஜராத் அணி விவரம்
ஷுப்மன் கில்(கேட்ச்), விருத்திமான் சாஹா(வ), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்