இதையடுத்து நடந்த மெஹா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்தது. இதுவரை ஐபிஎப் தொடரில் எந்தவொரு அணியும் இவ்வளவு தொகை செலவு செய்து ஒரு வீரரை ஏலத்தில் எடுத்ததில்லை. லக்னோ அணியில் ரிஷப் பண்ட், மார்க்ரம், பூரான் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் உள்ளதால் இன்னும் கேப்டன் யார் என முடிவு செய்யவில்லை என சஞ்சய் கோயங்கா சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார்.