உலகக் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட ஆளுமையான ரிக்கி பாண்டிங் தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக அவர் பயிற்சியாளராக பணியாற்றினார். டெல்லி அணி கடந்த 7 சீசன் களாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட டெல்லி அணியை கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.