ஐபிஎல் 22, 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.
இந்த நிலையில், இரு அணிகள் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இதில், சாஹா 4 ரன்களும், கில் 56 ரன்களும், பாண்ட்யா 13 ரன்களும், ஷங்கர் 19 ரன்களும், மில்லர் 46 ரன்களும் மனோகர் 42 ரன்களும் அடித்தனர்.எனவே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்து, மும்பை அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.