இதையடுத்து பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டிகாக் (81), ஸ்டாய்னஸ்(24) மற்றும் பூரான் (40) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். கேப்டன் கே எல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணியில் கோலி அவுட்டானதும் மளமளவென விக்கெட்கள் விழ ஆரம்பித்தன. இதனால் 19.4 ஓவர்களில் ஆர் சி பி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்த சீசனில் மூன்று போட்டிகளை தோற்ற இரண்டாவது அணியாக ஆர் சி பி உருவாகியுள்ளது. லக்னோ அணியில் மிகச்சிறப்பாக பந்துவீசைய மயங்க் யாதவ் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.