மும்பைக்கு தாவுகிறாரா ரஷீத் கான்?... குஜராத் அணிக்குப் பின்னடைவு!

vinoth

புதன், 23 அக்டோபர் 2024 (09:47 IST)
இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

வீரர்களை ரிடென்ஷன் மற்றும் RTM ஆகிய முறைகளில் அணிகள் தக்கவைக்கலாம். ஒரு அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே ரிடென்ஷன் முறையில் தக்கவைக்கிறது என்றால் ஏலத்தில் 5 வீரர்களை RTM முறையில் தக்கவைக்கலாம். இதன்படி அணிகள் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களுக்கான ஊதியம் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பது பற்றியும் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் வீரர்கள் தங்களை நல்ல தொகைக்கு விற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருக்கின்றன. அதற்கு தற்போது தாங்கள் இருக்கும் அணிகள் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் வேறு அணிகளுக்குத் தாவவும் தயாராக உள்ளனர். அந்த வகையில் ரஷீத் கான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸுக்கு தாவ உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் குஜராத் அணிக்காக தொடர்ந்து விளையாட 20 கோடி ரூபாய் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அந்த அணி நிர்வாகம் ஒத்துக் கொள்ளாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்