இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

vinoth

சனி, 3 மே 2025 (08:04 IST)
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளன. இதன் காரணமாக சென்னையில் நடக்கும் போட்டிகளின் டிக்கெட் விற்பனைக் கூட மந்தமாக உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை அணி, பெங்களூர் அணியை பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த சீசனில் தொடக்கத்தில் நடந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னையை வீழ்த்தியது. அதற்குப் பழிவாங்கும் விதமாக இன்றையப் போட்டி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று முழுவதும் பெங்களூருவில் மழை பெய்ததால் வீரர்கள் பயிற்சிக் கூட செய்ய முடியவில்லை. இன்றும் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகப் போட்டி பாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்