இலவசத்திற்கு அடித்துக்கொள்ளும் பிசிசிஐ மற்றும் எம்பிசிஏ

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (18:05 IST)
இந்தியா, மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் இடம் மற்றப்பட்டுள்ளது. 
 
வழக்கமாக பிசிசிஐயின் புதிய விதிகளின் படி மைதானத்தில் இருக்கும் மொத்த இடங்களில் 90 சதவீத டிக்கெட்களை பிசிசிஐ-யிடம் வழங்க படவேண்டும். மீதமுள்ள 10 சதவீத டிக்கெட்களை சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கம் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளாம்.
 
ஆனால், தற்போது கூடுதல் டிக்கெட்களை பிசிசிஐ வழங்க வேண்டும் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் (எம்பிசிஏ) கோரிக்கை வைத்தது. இதனால், பிசிசிஐ மற்றும் எம்பிசிஏக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 
 
எம்பிசிஏ இது குறித்து கூறியது பின்வருமாறு, 10 சதவீத இலவச டிக்கெட் எங்களுக்கு போதாது. நாங்கள் கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், அரசு துறையை சார்ந்தவர்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். 
 
கூடுதல் டிக்கெட்களை தர வில்லையென்றால் 2 வது ஒரு நாள் போட்டியை இந்தூர் ஹோல் கர் மைதானத்தில் நடத்த முடியாது என பிசிசிஐ-க்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. எனவே, இந்த போட்டி இந்தூர் மைதானத்தில் நடக்கும் என்பது சந்தேகமே.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்